ஓசூரில் பிரபல கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது


ஓசூரில் பிரபல கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 19 Dec 2019 4:15 AM IST (Updated: 19 Dec 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் பிரபல கொள்ளையன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஓசூர்,

கர்நாடக மாநிலம் மாலூர் கோலார் அருகே திருமலட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகா‌‌ஷ் (வயது 48). இவரது மகன் தர்மா என்ற ராஜூ(23). இவர்கள் இருவரும் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் பூட்டியிருந்த 6 வீடுகளின் கதவுகளை உடைத்து 82 பவுன் நகை மற்றும் 200 கிராம் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்த குற்றத்திற்காக கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் மீது ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், மத்திகிரி போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்தில் 1 மற்றும் ராயக்கோட்டையில் 1 என மொத்தம் 6 வழக்குகள் உள்ளன. இது தவிர, இவர்கள் இருவர் மீதும், பெங்களூரு நகர், பெங்களூரு மாவட்டம் மற்றும் கோலார் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளும் உள்ளன.

குண்டர் சட்டத்தில் கைது

தர்மா தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வலியுறுத்தி கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், மாவட்ட கலெக்டர் பிரபாகருக்கு பரிந்துரை செய்தார்.

இதனை ஏற்ற கலெக்டர் பிரபாகர், வாலிபர் தர்மாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தர்மாவிடம் போலீசார் வழங்கினர்.

Next Story