கொலை வழக்கில் எலக்ட்ரீசியனுக்கு ஆயுள் தண்டனை - காஞ்சீபுரம் கோர்ட்டு தீர்ப்பு
கொலை வழக்கில் எலக்ட்ரீசியனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி காஞ்சீபுரம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் அடுத்த சாலவாக்கத்தை அடுத்த சிறுதாமுரை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 55). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் கிருஷ்ணாவுக்கும் (25) முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு அரசு பஸ்சில் செல்லும்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பஸ்சில் இருந்து இறங்கிய பின்னரும் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணா பச்சையப்பனை கல்லால் தாக்கி கொலை செய்தார்.
சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணாவை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை காஞ்சீபுரம் கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் சாட்சிகளை ஆஜர் செய்தனர். இரு தரப்பிலும் விசாரணை செய்ததில் கொலை வழக்கு நிரூபிக்கப்பட்டு கிருஷ்ணாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் வழங்கி காஞ்சீபுரம் கூடுதல் அமர்வு கோர்ட்டு நீதிபதி கயல்விழி தீர்ப்பு வழங்கினார். ரூ.25 ஆயிரம் அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.
அரசு தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் இளவரசு ஆஜரானார்.
Related Tags :
Next Story