மாநகராட்சி கூட்டரங்கில் கண்ணாடி விழுந்து நொறுங்கியது; கமிட்டி தலைவர் காயத்துடன் உயிர் தப்பினர்


மாநகராட்சி கூட்டரங்கில் கண்ணாடி விழுந்து நொறுங்கியது; கமிட்டி தலைவர் காயத்துடன் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 19 Dec 2019 4:52 AM IST (Updated: 19 Dec 2019 4:52 AM IST)
t-max-icont-min-icon

மும்பை மாநகராட்சி தலைமை அலுவலக கூட்டரங்கில் கண்ணாடி விழுந்து நொறுங்கியது. இதில் பொதுப்பணி கமிட்டி தலைவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மும்பை, 

மும்பை சி.எஸ்.எம்.டி.யில் உள்ள மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று பொதுப்பணி கமிட்டி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுப்பணி கமிட்டி தலைவர் பிரீத்தி பதன்கர், 15-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பொதுப்பணி கமிட்டி தலைவர் பிரீத்தி பதன்கரின் இருக்கைக்கு மேலே பொருத்தப்பட்டு இருந்த பெரிய கண்ணாடி திடீரென உடைந்து கீழே விழுந்தது.

அந்த கண்ணாடி பிரீத்தி பதன்கர் இருக்கையின் ஓரத்தில் விழுந்து நொறுங்கியது.

இதனால் பதறி போன கவுன்சிலர்கள், அதிகாரிகள் ஓடிச்சென்று பிரீத்தி பதன்கரை மீட்டனர். அதிர்ஷ்வசமாக அவர் லேசான சிராய்ப்பு காயங்களுடன் உயிர் தப்பினார்.

அந்த கூட்ட அரங்கத்தில் கண்ணாடி உடைந்து நொறுங்கியதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவத்தால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு உண்டானது.

Next Story