கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்க வலியுறுத்தி மீனவர்கள் கடலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
திருக்கடையூர் அருகே சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்க வலியுறுத்தி மீனவர்கள் கடலில் இறங்கி கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கடையூர்,
நாகை மாவட்டம், திருக்கடையூர் அருகே காலமநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னமேடு மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் பைபர் படகு மற்றும் கட்டுமரங்கள் மூலம் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் ஏற்படும் கடல் சீற்றத்தால் கரைப்பகுதி அடிக்கடி அரிக்கப்பட்டு வருகிறது. இதனால் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கடல் அரிப்பு ஏற்பட்டு கடற்கரையோரம் போடப்பட்ட கான்கிரீட் சாலை சேதமடைந்துள்ளது. இதனால் படகுகளை கரையோரம் நிறுத்தி வைப்பதற்கு மீனவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து சின்னமேடு கடற்கரை பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் கருங்கல் தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
போராட்டம்
இந்த நிலையில் கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்க வலியுறுத்தி நேற்று சின்னமேடு மீனவ கிராம மீனவர்கள் கடலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், சின்னமேடு கடற்கரை பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் உடனடியாக கருங்கல் தடுப்புச்சுவர் அமைத்து தர வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story