ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் விக்கிரமராஜா பேட்டி
உள்நாட்டு வணிகத்தை மேம்படுத்த ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கரூரில் விக்கிரமராஜா கூறினார்.
கரூர்,
ஆன்லைன் வர்த்தகத்தின் காரணமாக வணிகர்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். 37 சதவீதம் வணிகம் சீரழிந்து குறைந்து போய்விட்டது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தும் வகையில் மாநிலம் தழுவிய அளவிலும், நாடு தழுவிய அளவிலும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. வருகிற ஜனவரி 6, 7, 8-ந்தேதிகளில் டெல்லியில் நடை பெறக்கூடிய வணிகர் மாநாட்டில் எங்களது அடுத்த கட்ட கடையடைப்பு போராட்டம் குறித்து அறிவிக்க இருக்கிறோம். இதில் அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.
தமிழகம் அளவிலும் தொடர் போராட்டத்தை அறிவிக்க உள்ளோம். எனவே மே 5-ந்தேதி திருவாரூரில் நடைபெறவுள்ள வணிகர் மாநாட்டிற்கு முன்பாக, வணிகர்களை அழித்து கொண்டிருக்கிற பிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும். இதனால் உள் நாட்டு வணிகம் மேம்படும். ஜி.எஸ்.டி. மூலமாக பல்வேறு பிரச்சினைகளை வணிகர்கள் சந்தித்து வருகின்றனர்.
அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு
அதே வேளையில் கரூரில் துறை சார்ந்த அதிகாரிகளிடம் உரிமம் போன்றவை வாங்குவதற்கு வணிகர்கள் வரும்போது லஞ்சம் கேட்பது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தெந்த அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள் என கணக்கிட்டு வருகிறோம். அவர்களது பெயர்களை பதிவு செய்து துறை அமைச்சரிடத்திலேயே நேரடியாக வழங்குவோம். அவர்களை எதிர்த்து போராடவும் தயராக உள்ளோம்.
ஜி.எஸ்.டி. வரிவிகிதத்தை 5, 12 சதவீதம் என்கிற விதத்தில் மட்டுமே வைக்க வேண்டும். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு வணிகம் தொய்வடைந்து வருகிறது. அமேசான், பிளிப்கார்ட் போன்றவற்றால் உள்நாட்டு வணிகம் சீரழிந்து வருகிறது. அவர்கள் சட்ட விதிகளை மீறி மிக குறைந்த விலைக்கு பொருட்களை விற்பதால் சொற்பமான வரியை அரசுக்கு செலுத்துவதால், அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுகிறது. அப்போது அரசு நிர்ணயிக்கும் எம்.ஆர்.பி. விலை எதற்கு? என எண்ண தோன்றுகிறது.
87 ஆயிரம் கடைகள் மூடல்
தமிழகத்தில் வணிகர்கள் கடைகளை இழுத்து மூடக் கூடிய நிலை வந்து விட்டது. ஆன்லைன் வர்த்தகத்தால் தமிழகத்தில் 87 ஆயிரம் கடைகள் மூடப்பட்டுள்ளது. வியாபாரிகள் தன்னை பாதுகாக்க முடிந்தளவு வியாபராம் செய்து கொண்டிருக்கின்றனர். மத்திய-மாநில அரசுகள் தொழில்துறையை முன்னேற்ற வெளிநாட்டு முதலீடுகளை தேடி செல்கின்றனர். ஆனால் உள்நாட்டு வணிகம் பாழ்பட்டு வருவதை சிந்தனையில் கொள்ளாதது ஏன்?. அரசுக்கு ஜி.எஸ்.டி. மூலம் ரூ.1 லட்சம் கோடி வசூல் ஆகிறது என்றால் அதற்கு மூலதனமாக இருப்பவர்கள் நாங்கள் தான். எனவே உள்நாட்டு வணிகத்தை காக்க மோடி அரசு முன்வர வேண்டும். மோடியும் ஒரு காலத்தில் டீ வியாபாரம் செய்தவர் என்பதால் தொழிலில் உள்ள சிரமம் பற்றி அவருக்கு நன்றாக தெரியும். பொதுவாக உள்ள 6 ஓட்டில் ஒரு ஓட்டு வணிகர் ஓட்டு உள்ளது. எனவே தேர்தலில் ஓட்டு எங்களிடம் கேட்பீர்களா? அல்லது அந்த வெளிநாட்டு நிறுவனங்களிடம் கேட்பீர்களா?. தினமும் 2½ கோடி பேரை நேரடியாக வியாபாரிகள், வணிகர்களால் சந்திக்க முடிகிறது. எனவே வணிகர்களின் சக்தியை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
முன்னதாக நடந்த வணிகர்களுடனான ஆலோசனை கூட்டத்தில், மாநில துணை தலைவர்கள் தேனி ஆனந்தம் நடராஜன், கந்தசாமி, கரூர் மாவட்ட தலைவர் வக்கீல் ராஜூ, செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் செல்வம், மாவட்ட துணை தலைவர் கோவிந்தராஜ், இணை செயலாளர்கள் சக்திவேல், பால்ராஜ், நந்தகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story