மதுராந்தகம் ஏரியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு
மதுராந்தகம் ஏரியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மதுராந்தகம்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகபெரிய ஏரிகளில் ஒன்று மதுராந்தகம் ஏரி. இந்த ஏரியின் உயரம் 23.3 அடி. ஏரியில் 694 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்கமுடியும். இந்த தண்ணீர் விவசாய நிலங்களுக்கு பயன்படுகிறது.
இந்த நிலையில் மதுராந்தகம் ஏரி தண்ணீரை சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த ஏரியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் படகு மூலம் சென்று ஆய்வு செய்தனர். ஏரியின் ஆழத்தையும் கணக்கீடு செய்தனர்.
ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததையடுத்து ஏரி அணையாக மாற்றப்படும் என பொதுமக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஏரியை அணையாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏரி தண்ணீரை விவசாயத்திற்கும் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காகவும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஏரியை சுற்றுலாத்தலமாக அமைப்பதற்கான திட்டமும் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். ஏரியில் இருந்து எடுக்கப்படும் வண்டல் மண் விவசாய நிலங்களில் கொட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story