மாவட்ட செய்திகள்

மாரண்டஅள்ளி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 16 வயது சிறுமி பலி + "||" + 16-year-old girl dies of dengue fever near Marantaalli

மாரண்டஅள்ளி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 16 வயது சிறுமி பலி

மாரண்டஅள்ளி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 16 வயது சிறுமி பலி
மாரண்ட அள்ளி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 16 வயது சிறுமி பலியானார்.
பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அருகே கெண்டேயன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம், விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மகள் சவுந்தர்யா (வயது 16). இவர் 3-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி காய்ச்்சலால் கடும் அவதி அடைந்தார். உடனே அவரது பெற்றோர், மாரண்ட அள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அந்த சிறுமியை அழைத்து சென்றனர்.


அங்கு அந்த சிறுமியை பரிசோதித்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது. உடனே அந்த சிறுமியை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பலி

அங்கு சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் அந்த சிறுமியை பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்தனர். இதனிைடயே நேற்று முன்தினம் இரவு அந்த சிறுமிக்கு மீண்டும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு திடீரென இறந்து விட்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கோபியில் கூலிவேலைக்கு வந்த வடமாநில தொழிலாளர்கள் 2 பேருக்கு காய்ச்சல்; கொரோனா அறிகுறியா? தீவிர மருத்துவ பரிசோதனை
கோபியில் கூலிவேலைக்கு வந்த வடமாநில தொழிலாளர்கள் 2 பேருக்கு காய்ச்சல் இருந்ததால், அவர்களுக்கு கொரோனா அறிகுறியா? என்று தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
2. கேரளாவில் பறவை காய்ச்சல்: நாமக்கல் கோழிப்பண்ணைகளில் கிருமிநாசினி மருந்து தெளிப்பு
கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டு இருப்பதை தொடர்ந்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நாமக்கல் கோழிப்பண்ணைகளில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
3. தமிழக எல்லையில் வாகனங்களுக்கு மருந்து தெளிப்பு: பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
தமிழக-கேரள எல்லையான புளியரையில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, வாகனங்களுக்கு மருந்து தெளிக்கப்படுகிறது. கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கோழிகள் திருப்பி அனுப்பப்பட்டன.
4. புதுவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை
புதுவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
5. டெங்கு, சிக்குன் குனியா நோய்களை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்
டெங்கு, சிக்குன் குனியா நோய்களை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.