போராட்டங்கள் மூலம் பதவிக்கு வந்ததை எடியூரப்பா மறந்து விட்டார்; குமாரசாமி விமர்சனம்


போராட்டங்கள் மூலம் பதவிக்கு வந்ததை எடியூரப்பா மறந்து விட்டார்; குமாரசாமி விமர்சனம்
x
தினத்தந்தி 21 Dec 2019 4:30 AM IST (Updated: 21 Dec 2019 2:54 AM IST)
t-max-icont-min-icon

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் குறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பெங்களூரு, 

போராட்டங்கள் மூலமே தான் இந்த பதவிக்கு வந்திருப்பதாக எடியூரப்பா அடிக்கடி சொல்கிறார். அவர் தற்போது அதை மறந்துவிட்டார். அவருக்கு தற்போது அதிகார போதை தலைக்கு ஏறியுள்ளதாக தெரிகிறது. 

முந்தைய ஆட்சி காலங்களில் எடியூரப்பாவின் போராட்டங்கள் துப்பாக்கியால் முடக்கப்பட்டதா?. போராட்டம் நடத்துபவர்கள் எடியூரப்பா அரசு ஏன் இவ்வளவு பகையை காட்டுகிறது.

அதிகாரத்தில் இருப்பவர்களின் தாகத்திற்கு மக்களின் பிணங்கள் தோரணங்களாக கட்டப்படுகின்றன. அத்தகையவர்கள் மரணத்தின் தரகர்களாக மாறியுள்ளனர். இத்தகையவர்களால் நிரம்பியுள்ள மக்கள் விரோத அரசுகளின் இறுதி காலம் நெருங்க தொடங்கியுள்ளது.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Next Story