மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.14 லட்சம் மோசடி - தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு + "||" + Tuticorin In a private export company Rs 14 lakh fraud Case against 3 persons including couple

தூத்துக்குடியில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.14 லட்சம் மோசடி - தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு

தூத்துக்குடியில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.14 லட்சம் மோசடி - தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு
தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனத்தில் ரூ.14 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி, 

பெங்களூருவை தலைமை இடமாக கொண்ட தனியார் ஏற்றுமதி- இறக்குமதி நிறுவனத்தின் கிளை அலுவலகம், தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த கிளை அலுவலகத்தை தூத்துக்குடியை சேர்ந்த வெயிலுகந்த பெருமாள் (வயது 45) என்பவர் நிர்வகித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் சிலர் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள கிளை அலுவலகத்துக்கு வந்து ஆய்வு பணிகள் மேற்கொண்டனர். அப்போது வெயிலுகந்த பெருமாள், அவருடைய மனைவி கோமதி (42), அந்தோணியார்புரத்தை சேர்ந்த அருண்குமார் (44) ஆகியோர் நிறுவனத்துக்கு தெரியாமல் முறைகேடுகளில் ஈடுபட்டு சுமார் ரூ.14 லட்சத்து 20 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நிறுவனம் சார்பில் தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன்அடிப்படையில் போலீசார், வெயிலுகந்த பெருமாள், அவருடைய மனைவி கோமதி, அருண்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடியில் ஏழைகள், சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு - மாநகராட்சி ஆணையாளர் தகவல்
தூத்துக்குடியில் ஏழைகள், சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
2. தூத்துக்குடி அருகே, என்ஜினீயர் வீட்டில் 39 பவுன் நகை திருட்டு
தூத்துக்குடி அருகே என்ஜினீயர் வீட்டில் 39 பவுன் நகைகளை மர்மநபர் திருடி சென்று உள்ளார்.
3. தூத்துக்குடியில் 48 பேருக்கு ரூ.6¼ லட்சம் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்
தூத்துக்குடியில் 48 பேருக்கு ரூ.6¼ லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
4. தூத்துக்குடி விமான நிலையத்தில் விபத்தில் காயம் அடைந்தவர்களை கண்டறிந்து மீட்கும் நவீன கருவி - நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.48½ லட்சம் செலவில் விபத்தில் காயம் அடைந்தவர்களை கண்டறிந்து மீட்கும் நவீன கருவிகளை விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
5. தூத்துக்குடியில் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது - 19,782 மாணவ-மாணவிகள் எழுதினர்
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு நேற்று காலை தொடங்கியது. இத்தேர்வை 19,782 மாணவ-மாணவிகள் எழுதினர்.