நிரவ் மோடிக்கு எதிரான வங்கி கடன் மோசடி வழக்கில் துணை குற்றப்பத்திரிகை; சி.பி.ஐ. தாக்கல்


நிரவ் மோடிக்கு எதிரான வங்கி கடன் மோசடி வழக்கில் துணை குற்றப்பத்திரிகை; சி.பி.ஐ. தாக்கல்
x
தினத்தந்தி 21 Dec 2019 5:26 AM IST (Updated: 21 Dec 2019 5:26 AM IST)
t-max-icont-min-icon

நிரவ் மோடிக்கு எதிரான வங்கி கடன் மோசடி வழக்கில் துணை குற்றப்பத்திரிகையை மும்பை சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்தது.

மும்பை, 

மும்பையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிஓடிய குஜராத் வைர வியாபாரி நிரவ் மோடி, மெகுல் சோக்சி மற்றும் சிலர் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், சி.பி.ஐ. தரப்பில் மும்பை சிறப்பு கோர்ட்டில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், நிரவ் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ. அதிகாரிகள் மும்பையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், நிரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி, பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கியின் துணை பொது மேலாளர் சஞ்சய் பிரசாத், நிரவ் மோடியின் கூட்டாளிகள் அமித் மாஜியா, சந்திப் மிஸ்திரி, மிஹிர் பன்சாலி ஆகியோரது பெயரும் இடம்பெற்று உள்ளது.

குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களில் நேஹல் மோடியும், சந்திப் மிஸ்திரியும் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர் என்றும், அவர்களுக்கு எதிராக விசாரணைக்கு ஆஜராக சம்மன் பிறப்பிக்க வேண்டும் எனவும் சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. கேட்டுக்கொண்டு உள்ளது.

Next Story