குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நீடூரில், கடைகள் அடைப்பு இயல்பு வாழ்க்கை பாதிப்பு


குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நீடூரில், கடைகள் அடைப்பு இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
தினத்தந்தி 21 Dec 2019 10:30 PM GMT (Updated: 21 Dec 2019 6:51 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மயிலாடுதுறை அருகே நீடூரில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

குத்தாலம்,

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து முஸ்லிம்கள் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே நீடூரில் நேற்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தியும் வர்த்தக சங்கம் சார்பில் கடைகள் அடைக்கப்பட்டன.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இதையொட்டி நீடூர் கடைவீதியில் உள்ள ஓட்டல்கள், மளிகை கடைகள், டீக்கடைகள், மருந்து கடைகள், பெட்டி கடைகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் நீடூர் கடைவீதி மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கடையடைப்பு போராட்டத்தால் நீடூர் பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டதால் நீடூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் அருகே உள்ள மயிலாடுதுறைக்கு சென்று பொருட்கள் வாங்கி வந்தனர்.

Next Story