ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்ப கொண்டு வந்த ரூ.52 லட்சத்துடன் மாயமான டிரைவர் - மன்னார்குடியில் கைது
ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்ப கொண்டு வந்த ரூ.52 லட்சத்துடன் மாயமான டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவர் தனது மாமனார் வீட்டில் பதுங்கி இருந்தபோது போலீசாரிடம் பிடிபட்டார்.
ஆலந்தூர்,
சென்னை வேளச்சேரி விஜயநகர் 1-வது பிரதான சாலையில் விஜயா வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. 19-ந் தேதி மாலை இந்த மையத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக வங்கி ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்பும் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் வினோத் (வயது 28), பணம் நிரப்பும் ஊழியர் மற்றொரு வினோத் (26) ஆகியோர் ஒரு காரில் சென்றனர்.
இவர்களுடன் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு ஊழியர் முகமது (27) என்பவரும் இருந்தார். அப்போது காரில் இருந்த ரூ.52 லட்சத்துடன் டிரைவர் அம்புரோஸ் (40) மாயமாகி விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பணத்துடன் மாயமான கார் டிரைவர் அம்புரோசை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர்.
இந்த நிலையில் ஆர்.கே.நகர் மணலி சாலையில் ஏ.டி.எம். பணத்தை கொண்டு வந்த கார் மட்டும் கேட்பாரற்று நிற்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதுகுறித்த விசாரணையில் டிரைவர் அம்புரோசின் மனைவி பிரதீமா, வியாசர்பாடியில் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார், பிரதீமாவிடம் விசாரித்தனர்.
இதில் அம்புரோஸ் திருடிச்சென்ற ரூ.52 லட்சத்தில் ரூ.20 லட்சத்தை மட்டும் அவரது உறவினர் வீட்டில் பதுக்கி வைத்து இருப்பது தெரிந்தது. அந்த பணத்தை போலீசார் மீட்டனர்.
தப்பிச்சென்ற அம்புரோஸ், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பெருகவாழ்ந்தான் போலீஸ் சரகம் தெற்கு மண்ணுக்குமுண்டான் கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் தங்கி இருப்பதாகவும் போலீசாரிடம் பிரதீமா தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் தனிப்படை போலீசார் அந்த கிராமத்துக்கு விரைந்தனர். இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பெருகவாழ்ந்தன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் போலீசார் தெற்கு மண்ணுக்குமுண்டான் கிராமத்துக்கு சென்று அங்கு தனது மாமனார் வீட்டில் பதுங்கி இருந்த அம்புரோசை கைது செய்து தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அம்புரோசை தனிப்படை போலீசார் வேளச்சேரிக்கு அழைத்து வருகின்றனர்.
அம்புரோஸ் கொள்ளையடித்த ஏ.டி.எம். பணம் ரூ.52 லட்சத்தில் ஏற்கனவே உறவினர் வீட்டில் இருந்து ரூ.20 லட்சம் மீட்கப்பட்ட நிலையில், வியாசர்பாடியில் உள்ள அவர்களது நண்பர்களிடம் கொடுத்து பதுக்கி வைத்து இருந்த ரூ.30 லட்சத்தையும் போலீசார் மீட்டதாக கூறப் படுகிறது.
அம்புரோஸ் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் விசாரணை நடத்திய பிறகுதான் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது போன்ற மேலும் பல விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக அம்புரோசின் உறவினர்கள், நண்பர்கள் என 6 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story