அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணியை கண்காணிக்க சட்ட ஆலோசனை குழு - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அறிவிப்பு
ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. தேர்தல் பணிகளை கண்காணிக்க வக்கீல்கள் சட்ட ஆலோசனைக்குழு பொறுப்பாளர்களை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நியமித்துள்ளார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் பணிகளை கண்காணிக்கும் வகையில் வக்கீல்கள், சட்ட ஆலோசனைக்குழு பொறுப்பாளர்களை அமைச்சரும் கட்சியின் மாவட்ட செயலாளருமான ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்துள்ளார். அதன்படி சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு தேர்தல் கண்காணிப்புக்குழு பொறுப்பாளா்களாக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துப்பாண்டியன் தலைமையில் துணைத்தலைவர் ஆனந்தகுமார் உள்பட 5 பேரும் சாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தேர்தல் கண்காணிப்புக்குழு பொறுப்பாளா்களாக மாநில பேரவை இணைச்செயலாளர் சேதுராமானுஜம் தலைமையில் வக்கீல் பாஸ்கரன் உள்பட 5 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வெம்்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தேர்தல் கண்காணிப்புக்குழு பொறுப்பாளா்களாக மாவட்ட மாணவரணி செயலாளர் நல்லதம்பி தலைமையில் வக்கீல் ராஜபாண்டி உள்பட 5 பேர், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு தேர்தல் கண்காணிப்புக்குழு பொறுப்பாளா்களாக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைசெயலாளர் ராஜகுரு தலைமையில் வக்கீல் ராஜேந்திரன் உள்பட 5 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தேர்தல் கண்காணிப்புக்குழு பொறுப்பாளா்களாக மாவட்ட வழக்கறிஞர்பிரிவு இணைசெயலாளர் கண்ணன் தலைமையில் சவுந்தர்ராஜன் உள்பட 5 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியக்குழு தேர்தல் கண்காணிப்புக்குழு பொறுப்பாளா்களாக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ராஜா தலைமையில் வக்கீல் ரமேஷ் உள்பட 5 பேர், விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழு தேர்தல் கண்காணிப்புக்குழு பொறுப்பாளா்களாக மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார் தலைமையில் வக்கீல் ராமமூர்த்தி உள்பட 5 பேர் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தேர்தல் கண்காணிப்புக்குழு பொறுப்பாளா்களாக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ரவி தலைமையில் வக்கீல் ஸ்ரீதரன் உள்பட 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
நரிக்குடி-காரியாபட்டி நரிக்குடிஊராட்சி ஒன்றியக்குழுதேர்தல் கண் காணிப்புக் குழு பொறுப்பாளா்களாக மாவட்ட வழக் கறிஞர் பிரிவு இணைசெயலாளர் பாலமுருகன் தலைமையில் வக்கீல் முத்துராஜன் உள்பட 5 பேர், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தேர்தல் கண்காணிப்புக் குழுபொறுப்பாளா்களாக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைசெயலாளர் ரமேஷ் தலைமையில்வக்கீல் மாஸ்டர் ரவிக்கண்ணன் உள்பட 5பேர், திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழு தேர்தல் கண்காணிப்புக் குழு பொறுப்பாளா்களாக மாவட்ட வழக்கறிஞர் சந்திரசேகர் தலைமையில் வக்கீல் ராமர் உள்பட 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story