தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 15 பறக்கும்படை அமைப்பு - கலெக்டர் தகவல்
மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர்,
ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி கடந்த 7-ந்தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.
தேர்தல் நடத்தை விதி முறைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 15 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வெம்பக்கோட்டை, சிவகாசி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள தனி தாசில்தார் சந்திரசேகரன், துணைதாசில்தார் பாண்டியன் ஆகியோர் தலைமையிலும், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு ஆகிய யூனியன் பகுதிகளுக்கு தனிதாசில்தார் சிவக்குமார், சங்கரபாண்டியன், கலால்துறை மேற்பார்வையாளர் அய்யாக்குட்டி ஆகியோர் தலைமையிலும் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
விருதுநகர், காரியாபட்டி ஆகிய யூனியன் பகுதிகளுக்கு தனி தாசில்தார் புஷ்பராஜன், டாஸ்மாக் துணை மேலாளர் பாலசுப்பிரமணியன், துணை தாசில்தார் லட்சம் ஆகியோர் தலைமையிலும், அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய யூனியன் பகுதிகளுக்கு தனி தாசில்தார் மகேஷ், துணை தாசில்தார் பானுமதி, தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் தலைமையிலும், திருச்சுழி, நரிக்குடி ஆகிய யூனியன் பகுதிகளுக்கு துணை தாசில்தார்கள் சிவனாண்டி, கலைவாணி, புகழேந்தி ஆகியோர் தலைமையிலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குழுவிலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 3 போலீஸ்காரர்கள், ஒரு வீடியோ கிராபர் இடம் பெறுவார்கள். பறக்கும்படை குழுவினர் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டபகுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணான 04562-252013-ல் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story