குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்: பா.ஜ.க.வினர் 300 பேர் மீது வழக்குப்பதிவு
திருச்சியில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், அந்த சட்டத்தை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளை கண்டித்தும் பா.ஜ.க. சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் மத்திய பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் மாவட்ட பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பா.ஜ.க.வின் மாவட்ட தலைவர் தங்க ராஜய்யன் உள்பட 300 பேர் மீது கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆர்ப்பாட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பாலக்கரை ராமகிருஷ்ணா தியேட்டர் பாலம் அருகே நேற்று முன்தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுமதியின்றி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அந்த அமைப்பின் மாவட்ட செயலாளர் கென்னடி உள்பட 25 பேர் மீது காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Related Tags :
Next Story