வேப்பனப்பள்ளி வாக்குச்சாவடியில் முன்னேற்பாடு பணிகள் கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு


வேப்பனப்பள்ளி வாக்குச்சாவடியில் முன்னேற்பாடு பணிகள் கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 22 Dec 2019 4:15 AM IST (Updated: 22 Dec 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

வேப்பனப்பள்ளியில் வாக்குச்சாவடியில் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு செய்தார்.

வேப்பனப்பள்ளி,

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் மட்டும் 27 ஊராட்சி மன்ற தலைவர்கள், 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 15 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 222 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு வேப்பனப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள தடுப்பு அரண்கள் அமைக்கும் பணிகள், பாதுகாப்பு பெட்டக அறையில் வாக்கு பெட்டிகள் வரிசையாக வைக்க கட்டங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இவற்றை மாவட்ட கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாகன தணிக்கை

தொடர்ந்து குடிநீர் வசதி, மின்சார வசதிகள், கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவு மையங்களில் சாய்வு நாற்காலிகள் மூலம் எளிதாக சென்று வாக்களிக்கும் விதமாக சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து கங்கலேரி ஊராட்சியில் ராயக்கோட்டை - வடுகம்பட்டி நெடுஞ்சாலையில் பறக்கும் படை அலுவலர்கள் வாகன தணிக்கை மேற்கொள்ளும் பணிகளையும் கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானபிரகாசம், உதவி பொறியாளர் முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், தாட்கோ மேலாளர் ராஜகுரு மற்றும் காவல் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story