அலங்காநல்லூர், வாடிப்பட்டியில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
அலங்காநல்லூர், வாடிப்பட்டியில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.
வாடிப்பட்டி,
அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேர்தல் அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஜனனி, சவுந்தர்யா மற்றும் தேர்தல் அலுவலர்கள் கருப்பசாமி, பழனிச்சாமி ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அப்போது உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாகவும், வாக்குப்பதிவு தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தேர்தல் பார்வையாளராக கூடுதல் கலெக்டர் பிரியங்கா கலந்து கொண்டார். இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு மாவட்ட கவுன்சிலர், 14 ஒன்றிய கவுன்சிலர்கள், 23 ஊராட்சி மன்றதலைவர்கள், 180 வார்டு உறுப்பினர்களுக்கு வருகிற 27-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் வாக்களிக்கும் முறை, வாக்குசாவடி அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு தாய் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. இந்த பயிற்சி வகுப்பிற்கு யூனியன் கமிஷனர் ராஜா தலைமை தாங்கினார். உதவி தேர்தல் அலுவலர் உமாமகேஷ்வரி முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சிஅலுவலர் (நிர்வாகம்) கிருஷ்ணவேணி வரவேற்றார். இந்த பயிற்சி வகுப்பினை கூடுதல் கலெக்டர் பிரியங்கா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்தல் உதவியாளர்கள் ஜெகதீசன், நித்யா, ராஜூ ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் வாக்குசாவடி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story