புதுக்கோட்டையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி


புதுக்கோட்டையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி
x
தினத்தந்தி 22 Dec 2019 4:00 AM IST (Updated: 22 Dec 2019 3:12 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி நேற்று நடந்தது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெற்றது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் கூட்டத்தில் பேசும் போது கூறியதாவது;-

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெறுகிறது. தூத்துக்குடி ஒன்றியத்திற்கு 27-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 2011-ம் ஆண்டிற்கு பிறகு வாக்குச்சீட்டு முறையில் நடைபெறும் தேர்தல் இதுவாகும். ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட சிறிய, சிறிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுவதால் பல்வேறு பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக தெரிந்து கொண்டு அவற்றை பின்பற்ற வேண்டும்.

ஓட்டுப்பெட்டிகளை முறையாக சீல் வைக்க வேண்டும். வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவு பெறும். அதையும் மீறி வரிசையில் நிற்பவரிடம் கடைசியில் நிற்பவருக்கு முதல் டோக்கன் என்ற அடிப்படையில் டோக்கனை வழங்க வேண்டும். வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஓட்டுப்பெட்டிகளை விதிமுறைகளின் படி சீல் வைத்து மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். வாக்குப்பதிவின் போது ஏற்படும் பிரச்சினைகளை உடனுக்குடன் மண்டல அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

பதற்றமான வாக்குச்சாவடிகள் ஏற்கனவே கண்டறியப்பட்டு அவைகளுக்கு கூடுதல் கண்காணிப்பு வசதிகளும், கூடுதல் பாதுகாப்பும் செய்யப்படும். இந்த பயிற்சியினை முழுமையாக தெரிந்து விதிமுறைகளை பின்பற்றி சந்தேகத்திற்கு இடமளிக்காத வகையில் தேர்தல் பணியாற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுடலை, பானு, வாக்குச்சாவடி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story