புதுவை மக்களுக்கு எதிராக உள்துறை அமைச்சகம் செயல்படுகிறது நாராயணசாமி வேதனை
புதுவை மக்களுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் செயல்படுவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி வேதனை தெரிவித்தார்.
புதுச்சேரி,
புதுவை மாநில மக்களுக்கு இவலச அரிசி வழங்க ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது விதி உருவாக்கப்பட்டது. புதுவையில் உள்ள ரேஷன்கடைகள் மூலம் அரிசி, கோதுமை வழங்க அந்த விதியில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது. அதன்படி இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. எங்கள் ஆட்சி 2016-ல் அமைந்தது முதல் நாங்களும் இலவச அரிசி வழங்க முடிவு எடுத்தோம். அதன்படி இலவச அரிசி வழங்கி வந்தோம்.
சட்டமன்ற தீர்மானம்
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்காக மத்திய அரசு தரும் நிதி அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. மாநில அரசு நிதியிலிருந்து நாங்கள் சிவப்பு நிற ரேஷன்கார்டுகளுக்கு தலா ரூ.20 கிலோ அரிசியும், மஞ்சள் நிற ரேஷன்கார்டுகளுக்கு தலா 10 கிலோ அரிசியும் வழங்கி வருகிறோம்.
இலவச அரிசி வழங்க கவர்னர் கிரண்பெடி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் சில நேரங்களில் அவரது விருப்பப்படி வங்கிக்கணக்கில் பணமும் செலுத்தினோம். மக்களின் எண்ணத்துக்கு ஏற்ப தொடர்ந்து இலவச அரிசி வழங்க சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றினோம்.
கருத்து வேறுபாடு
கவர்னர் கிரண்பெடி கிராமப்புறங்களுக்கு செல்லும்போது அவரை மறித்து பொதுமக்கள் இலவச அரிசி வழங்க வலியுறுத்தினார்கள். அதன்பின் இலவச அரிசி வழங்குவதை ஏற்றார். அதன்பின் அரிசிக்கு பதிலாக வங்கிக்கணக்கில் பணம் போட கூறினார்.
இதனால் கவர்னருக்கும், அமைச்சரவைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மத்திய அரசுக்கு அந்த கோப்பினை அனுப்பி உள்ளார். உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அரிசி வேண்டுமா? பணம் வேண்டுமா? என்று மத்திய உணவுத்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியபோது மக்கள் அரிசியை விரும்புவதால் அரிசியே வழங்குகிறோம் என்று தெரிவித்தோம்.
சட்ட வல்லுனர்களுடன்..
புதுச்சேரியின் பக்கத்து மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இதே முறைதான் உள்ளது. ஆனால் இப்போது மத்திய உள்துறை அமைச்சகம் அரிசிக்கு பதிலாக பணம் வழங்க கூறி உள்ளது.
மாநில அரசு மக்களுக்கு கொடு்த்த வாக்குறுதி, அமைச்சரவையின் முடிவு, மக்களின் கோரிக்கைகளை புறக் கணித்துவிட்டு கவர்னரின் கோரிக்கையை மட்டும் மத்திய அரசு உத்தரவு போட்டுள்ளது. இதுதொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் கலந்துபேச உள்ளோம்.
மக்களுக்கு எதிராக...
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கைகளை மாற்றியமைக்க கவர்னர், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அதிகாரம் இல்லை. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரையும் சந்தித்து பேச உள்ளோம். இதுதொடர்பாக மேல்நடவடிக்கை குறித்து அமைச்சரவையில் முடிவு செய்வோம்.
புதுவை மக்களுக்கு இலவச அரிசி வழங்க பயன்படுத்துவது புதுவை மக்களின் வரிப் பணம். மத்திய அரசின் பணமல்ல. இலவச அரிசி விவகாரத்தில் மத்திய அரசின் உணவுத்துறை, உள்துறை ஆகியன இருவேறுபட்ட கருத்துகளை கூறி வருகின்றன. கவர்னர் கிரண்பெடிக்கு ஆதரவாக மத்திய அரசு உள்ளது. புதுவை மாநில மக்களுக்கு எதிராக உள்துறை அமைச்சகம் செயல்படுகிறது.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
பேட்டியின்போது வைத்திலிங்கம் எம்.பி. உடனிருந்தார்.

Related Tags :
Next Story