ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு 13 வாக்கு எண்ணும் மையம் தயார் - கலெக்டர் ஆய்வு
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு 13 வாக்கு எண்ணும் மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது. சின்னக்கரை பார்க் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.
பல்லடம்,
திருப்பூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் 13 ஊராட்சி ஒன்றியங்களில் வருகிற 27-ந் தேதி, 30-ந் தேதி 2 கட்டமாக நடக்கிறது. 13 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு முடிந்ததும், ஓட்டுப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்படும். இதற்காக ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் ஒரு வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி அவினாசி ஒன்றியத்துக்கு பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், தாராபுரம் ஒன்றியத்துக்கு தாராபுரம் சின்னச்சாமி மேல்நிலைப்பள்ளியிலும், குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு மேல்நிலைப்பள்ளியிலும், காங்கேயம் ஒன்றியத்துக்கு நத்தக்காடையூர் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியிலும், குண்டடம் ஒன்றியத்துக்கு குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பொங்கலூர் ஒன்றியத்துக்கு ஏஞ்சல் பொறியியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுபோல் மடத்துக்குளம் ஒன்றியத்துக்கு உடுமலை தளி ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மூலனூர் ஒன்றியத்துக்கு மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பல்லடம் ஒன்றியத்துக்கு சின்னக்கரை பார்க் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், திருப்பூர் ஒன்றியத்துக்கு ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், உடுமலை ஒன்றியத்துக்கு உடுமலை அரசு கலைக்கல்லூரியிலும், ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு ஊத்துக்குளி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வெள்ளகோவில் ஒன்றியத்துக்கு வெள்ளகோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சின்னக்கரை பார்க் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப்பதிவு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்க ஒதுக்கீடு செய்யப்பட்ட அறைகள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று மின்வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது. ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக பல்லடத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தக்கூடிய வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story