இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 15 புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்பு


இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 15 புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்பு
x
தினத்தந்தி 22 Dec 2019 5:36 AM IST (Updated: 22 Dec 2019 5:36 AM IST)
t-max-icont-min-icon

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 15 புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவி ஏற்கிறார்கள். அவர்களுக்கு சபாநாயகர் காகேரி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி மீதான அதிருப்தியில் 15 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதைதொடர்ந்து ராஜினாமா செய்தவர்கள் உள்பட 17 எம்.எல்.ஏ.க்கள் கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனால் கர்நாடக சட்டசபையில் 17 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதில் மஸ்கி, ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிகளில் கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. இதனால் அந்த இரு தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. 9-ந் தேதி வெளியான முடிவில் 12 தொகுதிகளில் பா.ஜனதா, 2 இடங்களில் காங்கிரஸ், ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றனர்.

அதாவது பா.ஜனதா சார்பில் பெங்களூரு கே.ஆர்.புரம் தொகுதியில் பைரதி பசவராஜ், மகாலட்சுமி லே-அவுட்டில் கோபாலய்யா, யஷ்வந்தபுரத்தில் எஸ்.டி.சோமசேகர், விஜயநகரில் ஆனந்த்சிங், கோகாக்கில் ரமேஷ் ஜார்கிகோளி, காக்வாட்டில் ஸ்ரீமந்த் பட்டீல், அதானியில் மகேஷ் குமட்டள்ளி, ராணிபென்னூரில் அருண்குமார் புஜார், இரேகெரூரில் பி.சி.பட்டீல், எல்லாப்பூரில் சிவராம் ஹெப்பார், சிக்பள்ளாப்பூரில் சுதாகர், கே.ஆர்.பேட்டையில் நாராயணகவுடா ஆகியோரும், காங்கிரஸ் கட்சி சார்பில் சிவாஜிநகரில் ரிஸ்வான் ஹர்ஷத், உன்சூரில் மஞ்சுநாத் ஆகியோரும் வெற்றி பெற்றனர். ஒசக்கோட்டையில் சுயேச்சையாக போட்டியிட்ட சரத் பச்சேகவுடா வெற்றி பெற்றார்.

இந்த 15 புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு விழா பெங்களூரு விதான சவுதாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் சபாநாயகர் காகேரி கலந்து கொண்டு, புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த விழாவில் முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.

Next Story