ஊத்துக்கோட்டையில், புதர் மண்டி கிடக்கும் பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகை சீரமைக்க - பொதுமக்கள் கோரிக்கை
ஊத்துக்கோட்டையில் புதர் மண்டி கிடக்கும் பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தை ஒட்டி சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் பொதுப்பணித்துறை சார்பில் விருந்தினர் மாளிகை கட்டப்பட்டது. ஊத்துக்கோட்டைக்கு வரும் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் இங்கு தங்கி ஓய்வு எடுத்து செல்வது வழக்கம். விருந்தினர் மாளிகையை சுற்றி வண்ணவண்ண பூச்செடிகள், பச்சப்பசேலனும் புல் தரை இருந்தது. பராமரிப்பு இல்லாததால் அடர்த்தியாக முள்புதர்கள் வளர்ந்துள்ளது.
இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் யாரும் விருந்தினர் மாளிகைக்கு செலவதில்லை. இப்படி நகர மையப்பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகை வளாகத்தில் வளர்ந்துள்ள அடர்த்தியான முள்புதர்களில் இருந்து விஷ பாம்புகள் அருகே உள்ள வீடுகளுக்குள் செல்வதால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.
விருந்தினர் மாளிகையை ஒட்டி உள்ள போலீஸ் நிலையத்தில் உள்ள போலீசாரும் அச்சத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். விருந்தினர் மாளிகை வளாகத்தில் அடர்்த்தியாக வளர்ந்துள்ள முள்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இனியாவது பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி முள்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story