ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு வாரிய சொத்துக்களை மீட்க வேண்டும் தமிழக தர்காக்கள் பேரவை பொதுக்கூட்டத்தில் தீர்மானம்


ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு வாரிய சொத்துக்களை மீட்க வேண்டும் தமிழக தர்காக்கள் பேரவை பொதுக்கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 22 Dec 2019 10:30 PM GMT (Updated: 22 Dec 2019 7:23 PM GMT)

ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு வாரிய சொத்துக்களை மீட்க வேண்டும் என தமிழக தர்காக்கள் பேரவை பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக தர்காக்கள் பேரவை மாநில பொதுச்செயலாளர் கே.எம். சக்கரை முகமது தலைமை தாங்கினார். மாநிலப்பொருளாளர் நாசர் அலி முன்னிலை வகித்தார். மாநில இளைஞரணி செயலாளர் ஹனிப் சகில் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கோவை ஜமாத் உலமா செயலாளர் கே.ஏ.‌ஷாஜகான் கலந்து கொண்டு பேசினார்.

வக்பு வாரிய சொத்துக்கள்

கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு வாரிய சொத்துக்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளப்பட்டி குப்பைக்கிடங்கில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் முகமது காஜா, கரூர் மாவட்ட மருந்து வணிகர் சங்க ஆலோசகர் அபுதாகீர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞரணி மாவட்ட செயலாளர் நவ்பல் நன்றி கூறினார்.


Next Story