கொல்லங்கோடு அருகே கடையில் இருந்த பெண்ணிடம் 5¼ பவுன் சங்கிலி பறிப்பு


கொல்லங்கோடு அருகே கடையில் இருந்த பெண்ணிடம் 5¼ பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 23 Dec 2019 3:45 AM IST (Updated: 23 Dec 2019 1:26 AM IST)
t-max-icont-min-icon

கொல்லங்கோடு அருகே கடையில் இருந்த பெண்ணிடம் பொருட்கள் வாங்குவது போல் நடித்து 5¼ பவுன் நகைைய பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு அருகே மணலி பகுதியை சேர்ந்தவர் ஜெயசிங். இவருடைய மனைவி பிரீடா (வயது 37). இவர்கள் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் வியாபாரம் முடிந்த பின்பு பிரீடா கடையை மூடிக்கொண்டிருந்தார்.

அப்போது, இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் பிரீடாவிடம் சோப்பு வேண்டும் என கேட்டனர்.

நகை பறிப்பு

உடனே, பிரீடா சோப்பை எடுக்க முயன்ற போது ஒரு வாலிபர் பிரீடாவின் கழுத்தில் கிடந்த 5¼ பவுன் தங்க சங்கிலியை பறித்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரீடா ‘திருடன்... திருடன்...’ என சத்தம் போட்டார். உடனே மர்ம நபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி ெசன்றனர்.

இதுகுறித்து கொல்லங்கோடு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

கடையில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story