திருமுருகன்பூண்டி, அவினாசி பகுதிகளில் மீன், இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு
திருமுருகன்பூண்டி, அவினாசி பகுதிகளில் மீன், இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தங்கவேல், சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பெரியார்காலனி, குமார்நகர் மற்றும் அவினாசி, திருமுருகன்பூண்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஆடு, கோழி, மீன், இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் 29 மீன் கடைகள், 24 கோழி இறைச்சி விற்பனை கடைகள், 18 ஆடு இறைச்சி கடைகள் போன்றவற்றில் ஆய்வு நடந்தது. இதில் உணவு பாதுகாப்பு இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், பாலித்தீன் பைகள் 2 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபோல் இறைச்சி கடைகள் வைத்திருக்கும் வளாகம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண் டும். இறைச்சிகள் தொங்கவிடப்படும் கொக்கிகள் மற்றும் கம்பிகள் துருபிடிக்காமல் இருக்க வேண்டும். இறைச்சிகள் ஈ மொய்க்காமல் இருக்க வேண்டும்.
கோழிகளுக்கு மஞ்சள் நிறம் பூசுவதற்கு சாயம் பூசக்கூடாது. கோழி, இறைச்சிகள் நுகர்வோர் முன்னிலையில் வெட்டி சுத்தம் செய்து, விற்பனை செய்ய வேண்டும். வெட்டப்பட்ட இறைச்சிகள் கண்ணாடி கூண்டில் வைத்து பாதுகாக்க வேண்டும். பாலித்தீன் பைகள் பயன்படுத்தாமல் வாழை இலையில் வைத்து விற்பனை செய்ய வேண்டும். இறைச்சி கழிவுகளை முறையாக அப்புறப்டுத்த வேண்டு்ம் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story