பாரம்பரிய மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களின் கரைவலைகள் சேதப்படுத்தப்படும் நிலை - அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


பாரம்பரிய மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களின் கரைவலைகள் சேதப்படுத்தப்படும் நிலை - அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 23 Dec 2019 4:00 AM IST (Updated: 23 Dec 2019 3:18 AM IST)
t-max-icont-min-icon

வாலிநோக்கம் கடல்பகுதியில் பாரம்பரிய மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களின் கரைவலைகளை சேதப்படுத்தும் மீனவர்களை மீன்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்த கோரிக்கைவிடுக்கப்பட்டு உள்ளது.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதானம் ஆகும். இந்த தொழிலை நம்பி ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், தொண்டி, ஏர்வாடி, தேவிபட்டினம், வாலிநோக்கம் உள்ளிட்ட மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கம் பகுதியில் உள்ள மீனவர்கள் பழமை மாறாமல் பாரம்பரிய மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ெவளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறலால் கரைவலை மீன் பிடிப்பு முழுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக வாலிநோக்கம் மீனவர்கள் புலம்பி வருகின்றனர்.

இதுபற்றி வாலிநோக்கத்தை சேர்ந்த மீனவர் உதுமான், இபுராகிம்ஷா ஆகியோர் கூறியதாவது:-

மீன் பிடிப்பதில் பல வசதிகள் வந்தாலும் பழமை மாறாத மீன்பிடிப்பு என்றால் அதுபாரம்பரிய கரை வலை மீன்பிடிப்பு தான். என்ஜின் பொருத்தப்பட்ட பல அதி நவீன படகுகள் வந்ததால் நாளுக்குநாள் கரைவலை மீன் பிடிப்பு குறைந்து கொண்டு வருகிறது.

மீன் பிடி வலைகளிலேயே கரை வலை தான் அதிக எடை மற்றும் அதிக நீளமுடையது. கரை வலை மீன் பிடிப்பு என்பது சிறிய நாட்டுப்படகில் கரை வலைகளுடன் கடலுக்குள் சென்று கடற்கரையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் வரையிலான கடல் பகுதியில் விட்டு விடுவர்கள்.

அதன் பின்னர் கடலில் இருக்கும் அந்த வலையை கரையில் நின்றபடி 60-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இழுக்க தொடங்குவார்கள். மீன்களுடன் அந்த வலையை கரைக்கு முழுமையாக இழுத்துவர 4 முதல் 5 மணிநேரம் வரை ஆகலாம். பாறை, மாவுலா, நெய்மீன் உள்ளிட்ட பலவகை மீன்கள் கிடைக்கும்.

ஆனால் வாலிநோக்கம் கடல் பகுதியில் மீனுக்காக கடலில் விரிக்கப்பட்டு வரும் கரைவலைகளை ெவளி மாவட்டத்தில் இருந்து என்ஜின் பொருத்தப்பட்ட படகுகளில் வரும் மீனவர்கள் வலைகளை சேதப்படுத்தி செல்கின்றனர்.இதனால் கரை வலை மீன்பிடி தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே வாலிநோக்கம் கடல் பகுதியில் அத்து மீறும் ெவளிமாவட்ட மீனவர்களை தடுத்து நிறுத்த மீன்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாலிநோக்கம் பகுதி கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துவருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.வாலிநோக்கத்திற்கு அடுத்தபடியாக தனுஷ்கோடி பகுதியிலும் குறிப்பிட்ட சில மீனவர்கள் இன்னும் பாரம்பரிய கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story