உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி
பெரம்பலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி நடந்தது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில், வருகிற 27-ந் தேதி பெரம்பலூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதி களுக்கான வாக்குப்பதிவும், 30-ந் தேதி வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவுகளுக்காக மொத்தம் 648 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள மொத்தம் 5,260 அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி அந்தந்த ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடந்தது.
அதன்படி பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கான பயிற்சி, பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கான பயிற்சி வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், ஆலத்தூர் ஒன்றியத்திற்கான பயிற்சி பாடாலூர் அரசு மேல் நிலைப்பள்ளியிலும், வேப்பூர் ஒன்றியத்திற்கான பயிற்சி வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடந்தது.
கலெக்டர் சாந்தா ஆய்வு
இந்த பயிற்சியை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார். மேலும் அவர் தேர்தலில் பணியாற்றும் அலுவலர் களின் தபால் ஓட்டுக்கான படிவங்களை வழங்குவது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை முறையாக கடை பிடித்து தேர்தலை சிறப்பான முறையில் நடத்திட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார். பயிற்சியில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அன்று மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி மையங்களில் 1 முதல் 6 வரையிலான நிலை அலுவலர்களுக்கு என்னென்ன பணிகள் எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்து பயிற்றுனர்கள் விளக்கமளித்து பேசினர். மேலும் வாக்குப்பெட்டியை எவ்வாறு கையாளுவது குறித்தும் பயிற்றுனர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) தெய்வ நாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story