சாலை தடுப்பு சுவரின் மீது ஏறி நின்ற காரால் பரபரப்பு - பொதுமக்கள் மீட்டனர்
குன்றத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று அங்கு இருந்த தடுப்புச்சுவரில் ஏறி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் வந்த குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
பூந்தமல்லி,
மாங்காடு அடுத்த பட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஷேக் (வயது 35). இவர் நேற்று முன்தினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு தனது காரில் குடும்பத்துடன் சென்று விட்டு, இரவு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். குன்றத்தூர்-குமணன்சாவடி செல்லும் சாலையில் சிவன் தாங்கல் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவர் மீது ஏறி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் காரில் இருந்தவர்கள் பயத்தில் அலறினர்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்ததும், அந்த பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இதையடுத்து அவர்கள் ஓடிவந்து காரில் இருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டு காரில் இருந்து வெளியே கொண்டுவந்தனர். இதில், அவர்களுக்கு எந்தவித காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இதையடுத்து பொதுமக்களே அந்த காரை அங்கிருந்து அப்புறப்படுத்தி அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
குன்றத்தூரில் இருந்து குமணன்சாவடி செல்லும் சாலையில் உள்ள இந்த பகுதியில்தான் சாலையின் நடுவே தடுப்பு சுவர் ஆரம்பிக்கிறது. ஏற்கனவே பலமுறை இந்த தடுப்பு சுவரின் மீது அரசு பஸ்கள் மோதி விபத்து நடந்து உள்ள நிலையில், தடுப்பு சுவரின் ஆரம்ப பகுதி வாகனங்கள் மேலே ஏறி செல்லும் அளவுக்கு தாழ்வாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டதால் இங்கு விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் இங்கு தடுப்பு சுவரை முறையாக அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story