உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி உறுதி அமைச்சர் காமராஜ் பேட்டி


உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி உறுதி அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 24 Dec 2019 4:30 AM IST (Updated: 24 Dec 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி என அமைச்சர் காமராஜ் கூறினார்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அசே‌‌ஷம் கிராமத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம் முதல் தற்போது வரை தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. அலை வீசுகிறது. அ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி. குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்த உண்மை நிலையை தெரிந்து கொண்டதால் கமல்ஹாசன் தி.மு.க. நடத்தும் பேரணியில் பங்கேற்கவில்லை.

அமைதியை நிலைநாட்ட...

அ.தி.மு.க. சிறுபான்மையினரை பாதுகாக்கும் இயக்கம். தமிழகத்தில் அமைதியை நிலைநாட்டவும், மக்கள் பிரச்சினைகள் இன்றி வாழவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story