சிங்கம்பேட்டை அரசு பள்ளியில், வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர் ஆய்வு
சிங்கம்பேட்டை அரசு பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் ஆய்வு செய்தார்.
அம்மாபேட்டை,
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் நடைபெற உள்ளது. அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகள் உள்ளன. இதில் 195 வார்டு் உறுப்பினர்கள், 17 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகளுக்கு 30-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
இதற்காக அம்மாபேட்டை ஒன்றியத்தில் 150 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு் உள்ளன. இங்கு பதிவான வாக்குகள் சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து எண்ணப்படுகிறது. ஓட்டு பதிவான வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக வைக்கும் அறை, வாக்கு எண்ணும் அறை, மாவட்ட ஊராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றிய வார்டுகள், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டுகள் ஆகியவற்றில் பதிவான வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்க்கு செல்ல தனி தனி பாதைகள் அமைத்தல் உள்ளிட்டவைகளுக்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் நேற்று சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது அவர், ஓட்டுகள் பதிவான வாக்குப்பெட்டிகளை வைக்க போதுமான இடவசதி உள்ளதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மா.சுந்தரவடிவேலு, குமார் மற்றும் உதவி அலுவலர்கள் உடன் இருந்தனர். முன்னதாக அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் தேர்தல் பணிகளை தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் பார்வையிட்டார்.
Related Tags :
Next Story