தேர்தல் பிரசாரத்தின் போது ஆதரவாளர்களுக்கு மதுபாட்டில்; பெண் வேட்பாளர் மீது வழக்கு - 72 மதுபாட்டில்கள் பறிமுதல்


தேர்தல் பிரசாரத்தின் போது ஆதரவாளர்களுக்கு மதுபாட்டில்; பெண் வேட்பாளர் மீது வழக்கு - 72 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 24 Dec 2019 3:30 AM IST (Updated: 24 Dec 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே தேர்தல் பிரசாரத்தின் போது ஆதரவாளர்களுக்கு மதுபாட்டில்கள் வழங்கிய பெண் வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 72 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள கோவிந்தநல்லூரை சேர்ந்தவர் ஈஸ்வரி. இவர் கட்டனார்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவர் ஆதரவாளர்களுடன் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் பிரசாரம் முடிந்தவுடன் தனது ஆதரவாளர்களுக்கு வழங்குவதற்காக கோவிந்தநல்லூர் ஆத்திபட்டி சாலையில் ஒரு பட்டாசு ஆலை அருகே 72 மதுபாட்டில்கள் வைத்திருந்தாராம்.

அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற வச்சக்காரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுலோச்சனா ரூ.8,600 மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததோடு ஊராட்சி தலைவர் பதவி வேட்பாளர் ஈஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Next Story