குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பள்ளப்பட்டியில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பள்ளப்பட்டியில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Dec 2019 10:30 PM GMT (Updated: 23 Dec 2019 8:02 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, பள்ளப்பட்டி ‌ஷா நகரில் ஜமாத்தார்கள், பொதுமக்கள், தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அரவக்குறிச்சி,

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, பள்ளப்பட்டி ‌ஷா நகரில் ஜமாத்தார்கள், பொதுமக்கள், தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, குடியுரிமை சட்ட திருத்தத்தினை மதத்தின் அடிப்படையில் மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது ஆகும். மேலும் இலங்கை தமிழர்களுக்கும் இதில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. நாட்டில் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. பிரச்சினையால் தொழில் நலிவடைந்து வருவதில் கவனம் செலுத்தாமல் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது ஏன்? எனவே குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் தோட்டம் ப‌ஷீர் அகமது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொகுதிச் செயலாளர் ரீபாய்தீன் ஹூசனி உள்பட ஆண்கள், பெண்கள் என ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.


Next Story