தென்காசியில் முதன் முறையாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது


தென்காசியில் முதன் முறையாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது
x
தினத்தந்தி 25 Dec 2019 3:00 AM IST (Updated: 25 Dec 2019 2:29 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் முதன் முறையாக விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சுப்பராஜா திருமண மண்டபத்தில் காலை 11 மணிக்கு நடக்கிறது.

தென்காசி, 

தென்காசி மாவட்டத்தில் முதன் முறையாக விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சுப்பராஜா திருமண மண்டபத்தில் காலை 11 மணிக்கு நடக்கிறது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளனர்.

எனவே விவசாயிகள் குறை தீர்ப்பதற்காக நடைபெறும் இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்ட விவசாயிகள் அனைவரும் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story