நெல்லை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பிடிபட்டது 2 பேர் கைது
நெல்லை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பிடிபட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
நெல்லை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பிடிபட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரேஷன் அரிசி பிடிபட்டது
நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சேக் அப்துல்காதர், சுரேந்திரகுமார் மற்றும் போலீசார் நெல்லையை அடுத்த நரசிங்கநல்லூர் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஒரு வேன் வந்தது. அதை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த வேனில் மேலப்பாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் சேகரிக்கப்பட்ட ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக இருந்தது. மொத்தம் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த ரேஷன் அரிசிகள் கேரளாவுக்கு கடத்துவதற்காக சேகரிக்கப் பட்டது தெரியவந்தது.
2 பேர் கைது
இது தொடர்பாக வினோத்குமார் (26), கணேசன் (31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் மயிலப்பபுரத்தை சேர்ந்த கொம்பையா (47) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் தாழையூத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story