நடைமேம்பாலம் கட்டும் பணி: கல்யாண்- டோம்பிவிலி இடையே இன்று ரெயில் சேவை ரத்து மத்திய ரெயில்வே அறிவிப்பு
நடைமேம்பாலம் கட்டும் பணி காரணமாக இன்று கல்யாண்- டோம்பிவிலி இடையே ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.
மும்பை,
நடைமேம்பாலம் கட்டும் பணி காரணமாக இன்று கல்யாண்- டோம்பிவிலி இடையே ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.
ரெயில் சேவை இருக்காது
மத்திய ரெயில்வே வழித்தடத்தில் உள்ள தாக்குர்லி ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலம் கட்டப்பட உள்ளது. இதையொட்டி இன்று(புதன்கிழமை) 6 மீட்டர் அகலம் கொண்ட 4 ராட்சத தூண்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
எனவே இன்று காலை 9.45 மணி முதல் பிற்பகல் 1.45 மணி வரை கல்யாண்- டோம்பிவிலி இடையே மின்சார ரெயில்கள் இயக்கப்படாது. மேலும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டுள்ளன.
நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்
சென்னை- சி.எஸ்.எம்.டி. ரெயில்(11042) கர்ஜத், பன்வெல், திவா வழியாக சி.எஸ்.எம்.டி. வந்தடையும். சி.எஸ்.எம்.டி.- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்(16339) திவா, பன்வெல், கர்ஜத் வழியாக இயக்கப்படும். இதுதவிர மும்பை- புனே இடையே இயக்கப்படும் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேபோல பராமரிப்பு பணிகள் நடைபெறும் நேரத்தில் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை சி.எஸ்.எம்.டி.- தானே, டோம்பிவிலி இடையேயும், 20 நிமிடங்களுக்கு ஒரு முறை கல்யாண்- கசாரா, கர்ஜத் இடையேயும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.
இந்த தகவல் மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story