கடையநல்லூரில் அனுமதியின்றி பேரணி: ஜமாத் நிர்வாகிகள் உள்பட 13 ஆயிரம் பேர் மீது வழக்கு


கடையநல்லூரில் அனுமதியின்றி பேரணி: ஜமாத் நிர்வாகிகள் உள்பட 13 ஆயிரம் பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 25 Dec 2019 10:30 PM GMT (Updated: 25 Dec 2019 6:48 PM GMT)

கடையநல்லூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுமதியின்றி பேரணி நடத்திய ஜமாத் நிர்வாகிகள் உள்பட 13 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கடையநல்லூர், 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முஸ்லிம்கள் கலந்து கொண்ட பிரமாண்ட பேரணி நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

கடையநல்லூர் பகுதியில் உள்ள 63 பள்ளிவாசல் முஸ்லிம் ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து ஐக்கிய ஜமாத் என்ற பெயரில் இந்த பேரணியை நடத்தின. இதில் பங்கேற்றவர்கள், 200 மீட்டர் நீள தேசிய கொடியை ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர்.

இந்த நிலையில் போலீஸ் அனுமதியின்றி இந்த பேரணியை நடத்தியதாக ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது, தென்காசி மாவட்ட அரசு தலைமை ஹாஜி மொய்தீன் அன்சாரி, முஸ்லிம் லீக் மாநில அமைப்பாளர் நெல்லை மஜீத், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி, யாசகான், தவ்ஹீத் ஜமாத் முஜாஹித், மஸ்ஜித் முபாரக் ஜமாத், சைபுல்லா ஹாஜா ஜமாத் உலமா செய்யது இப்ராஹிம், த.மு.மு.க. முகம்மது அலி உள்பட 13 ஆயிரம் பேர் மீது கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story