ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 25 Dec 2019 10:30 PM GMT (Updated: 25 Dec 2019 6:49 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் தாசில்தார் அலுவலகம் அருகில் வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி சாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கமலாலயம் மேல்கரையில் உள்ள பால ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு யாகபூஜை நடைபெற்றது.

மன்னார்குடி

மன்னார்குடியில் உள்ள மேலவீதி ஆஞ்சநேயர் கோவில், வெண்ணெய்தாழி மண்டப ஆஞ்சநேயர் கோவில், கீழராஜவீதி ஆஞ்சநேயர் கோவில், திருமஞ்சன வீதி செந்தூர ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திருமஞ்சன வீதியில் உள்ள செந்தூர ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில் ஆஞ்சநேயர் செந்தூரத்தால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் ஆஞ்சநேயர் வேடமணிந்த பக்தர்கள் செந்தூர ஆஞ்சநேயரை வழிபட்டு நடனமாடியவாறு ஊர்வலமாக சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவையொட்டி வீரஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் வீர ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story