நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஜெயந்தி விழா: 1 லட்சத்து 8 வடைகளால் சிறப்பு அலங்காரம்
அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயருக்கு நேற்று 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையொட்டி திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் நேற்று ஆஞ்ச நேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி 2 டன் பூக்களால் கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
1 லட்சத்து 8 வடைகள்
நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலைகள் ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்பட்டது. பின்னர் பகல் 12 மணியளவில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் தொடங்கியது. இதில் எண்ணெய், தயிர், சந்தனம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்கள் கொண்டு பட்டாச்சாரியர்கள் அபிஷேகம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு குடம், குடமாக பால் ஊற்றியும் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நீண்ட வரிசையில் பக்தர்கள்
இதையொட்டி நாமக்கல்-கோட்டை சாலையில் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதில் நாமக்கல் மாவட்டம் மட்டும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். அவர்கள் துளசி மாலை, வெற்றிலை மாலை கொண்டு வந்து சாமிக்கு சாற்றி வழிபட்டு சென்றதை காண முடிந்தது.
இதையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Related Tags :
Next Story