தர்மபுரி அருகே வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கிய வேட்பாளர் கைது
தர்மபுரி அருகே வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த ஊராட்சி வார்டு வேட்பாளரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நாளை(வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 30-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. உள்ளாட்சி தேர்தலைமுன்னிட்டுமதுக்கடைகளை மூட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.இந்தநிலையில் மாவட்டத்தில் மதுபாட்டில்களை பலர் பதுக்கி வைத்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி அருகே உள்ள கடகத்தூர் பகுதியில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் அன்பு (வயது 35) என்பவர் வீட்டில் 350 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
வேட்பாளர் கைது
இதையடுத்து போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story