குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் தொல்.திருமாவளவன் பேட்டி
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என்று சேலத்தில் தொல்.திருமாவளவன் கூறினார்.
சேலம்,
சேலத்தில்பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்எம்.பி.நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். அந்த அடிப்படையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மோடி அரசு கொண்டு வந்திருக்கிறது. இது முஸ்லிம் மக்களுக்கு எதிரானது என்பதை காட்டிலும் ஒட்டுமொத்த தேசத்திற்கு எதிரான நடவடிக்கை என்று கூறலாம். அரசியல் அமைப்பு சட்டம் என்பது, மதம், சாதி, இனம் என பாகுபாடு இல்லாமல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால் இவை அனைத்தையும் தெரிந்த பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்து போக செய்யும் வகையில் மதத்தின் பெயரால்குடியுரிமைதிருத்தசட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இந்த சட்டத்தை ஜனநாயக சக்திகள் எதிர்த்து வருகின்றன. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 60-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, மக்களின் சமூக கட்டமைப்பை பாதிக்கக்கூடிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டங்கள் தொடரும்.
உள்ளாட்சி தேர்தல்
பா.ஜனதாவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவாக உள்ள அ.தி.மு.க. அரசுக்கு உள்ளாட்சி தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள். ஜார்க்கண்ட் மாநில தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கு அம்மாநில மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். அங்கு ஆட்சியில் இருந்த பா.ஜ.க. மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இந்தியாவில் குடியுரிமைதிருத்தசட்டத்தை அமல்படுத்தியதின் விளைவால் பா.ஜ.க. ஆட்சி கவிழ்ந்துள்ளது. அதேபோல், தமிழகத்திலும் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் தி.மு.க. தலைமையில் நடந்த பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இது மத்திய பா.ஜ.க. அரசு மீது ஏற்பட்டுள்ள எதிர்ப்பை பிரதிபலிக்க செய்தது. சென்னையில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சார்பில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக நடைபெறும் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் முறையாக நடக்க வாய்ப்பில்லை. அரசு அதிகாரிகள் அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எனவே, உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் முறையாக நடத்த வேண்டும். இவ்வாறு தொல்.திருமாவளவன் எம்.பி.கூறினார்.

Related Tags :
Next Story