சாப்பிட்டு விட்டு பணம் தர மறுப்பு: ஓட்டல் உரிமையாளரை கத்தியால் குத்தியவர் கைது


சாப்பிட்டு விட்டு பணம் தர மறுப்பு: ஓட்டல் உரிமையாளரை கத்தியால் குத்தியவர் கைது
x
தினத்தந்தி 26 Dec 2019 3:00 AM IST (Updated: 26 Dec 2019 5:11 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டி அருகே சாப்பிட்டு விட்டு பணம் தர மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் ஓட்டல் உரிமையாளரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை மேலத்தெருவை சேர்ந்த மருதுபாண்டி(வயது45) என்பவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் அதே ஊரைச்சேர்ந்த நக்கிலிப்பாண்டி(60) என்பவர் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க மறுத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஓட்டலை அடைத்து விட்டு மருதுபாண்டி வரும்போது, நக்கிலிப்பாண்டி மறைந்திருந்து தான் வைத்திருந்த கத்தியால் மருதுபாண்டியை குத்தி உள்ளார். இதில்பலத்த காயமடைந்த அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எழுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து நக்கிலிப்பாண்டியை கைது செய்தனர்.

அவர் மீது ஏற்கனவே எழுமலை போலீஸ் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story