மாவட்ட செய்திகள்

ஜோலார்பேட்டை அருகே, ஆசிரியர் மனைவி தீக்குளித்து தற்கொலை + "||" + Near Jolarpet, Teacher's wife Suicide by fire

ஜோலார்பேட்டை அருகே, ஆசிரியர் மனைவி தீக்குளித்து தற்கொலை

ஜோலார்பேட்டை அருகே, ஆசிரியர் மனைவி தீக்குளித்து தற்கொலை
ஜோலார்பேட்டை அருகே ஆசிரியர் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஜோலார்பேட்டை, 

ஜோலார்பேட்டையை அடுத்த மூக்கனூர் அடியத்தூர் பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி. இவர், மல்லப்பள்ளி அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி கீதாமணி (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் கீதாமணிக்கு ஒவ்வொரு அமாவாசை அன்றும் திடீரென்று உடல்நலம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அமாவாசையன்று கீதாமணிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டதாக தெரிகிறது. இதில் தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கீதாமணியின் தந்தை ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருக்கோவிலூர் அருகே, வாலிபர், தீக்குளித்து தற்கொலை - மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்காததால் விபரீத முடிவு
திருக்கோவிலூர் அருகே மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்காததால் மனமுடைந்த வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. கண்ணமங்கலம் அருகே, கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
கண்ணமங்கலம் அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. விக்கிரவாண்டியில் பெண், தீக்குளித்து தற்கொலை - காரணம் என்ன? போலீஸ் விசாரணை
விக்கிரவாண்டியில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. நர்சு தீக்குளித்து தற்கொலை - உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டம்
திருமணமான ஒரு ஆண்டில் நர்சு ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டம் நடத்தினர்.
5. விருத்தாசலம் அருகே, பட்டதாரி பெண், தீக்குளித்து தற்கொலை - காரணம் என்ன? போலீசார் விசாரணை
விருத்தாசலம் அருகே பட்டதாரி பெண், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை