உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 2,660 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 2,660 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் முன்னாள் படை வீரர்களுக்கு வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) முதற்கட்ட தேர்தல் தளி, ஓசூர், காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை, மத்தூர் ஒன்றியங்களில் நடைபெறுகிறது.
இதையடுத்து வருகிற 30-ந் தேதி 2-வது கட்டமாக கிருஷ்ணகிரி, கெலமங்கலம், பர்கூர், வேப்பனப்பள்ளி, சூளகிரி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. நாளை நடைபெற உள்ள முதற்கட்ட தேர்தலுக்காக ஆயிரத்து 46 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் போலீசார் மற்றும் முன்னாள் படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
2,660 போலீசார்
அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரில் உள்ள மைதானத்தில், வாக்குச்சாவடிகளை ஒதுக்கும் பணிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் தலைமையில் நடந்தது. அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேசியதாவது:- உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெற உள்ளதால் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
முன்னாள் படைவீரர்களுக்கு தங்கும் வசதியும், உணவு உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டுள்ளதால், முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன், அவர்களுக்கு 2-ம் கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டும். உள்ளாட்சி தேர்தல் பணியில் மாவட்ட போலீசார் ஆயிரத்து 500 பேரும், ஆயுதப்படை போலீசார் 200 பேர், முன்னாள் ராணுவத்தினர் 400 பேர், சிறப்பு அதிரடிப் படை போலீசார் 200 பேர், ஊர்க்காவல் படையினர் 300 பேர், திருப்பத்தூர் மாவட்ட போலீசார் 60 பேர் உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 660 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story