சூரிய கிரகணத்தையொட்டி மூடநம்பிக்கைகளை வெளிப்படுத்துவது சரியல்ல மந்திரி ஆர்.அசோக் கண்டிப்பு


சூரிய கிரகணத்தையொட்டி மூடநம்பிக்கைகளை வெளிப்படுத்துவது சரியல்ல மந்திரி ஆர்.அசோக் கண்டிப்பு
x
தினத்தந்தி 27 Dec 2019 4:00 AM IST (Updated: 27 Dec 2019 12:08 AM IST)
t-max-icont-min-icon

சூரிய கிரகணத்தையொட்டி மூடநம்பிக்கைகளை வெளிப்படுத்துவது சரியல்ல என்று மந்திரி ஆர்.அசோக் கூறினார்.

பெங்களூரு, 

சூரிய கிரகணத்தையொட்டி மூடநம்பிக்கைகளை வெளிப்படுத்துவது சரியல்ல என்று மந்திரி ஆர்.அசோக் கூறினார்.

வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சொத்துகள் பறிமுதல்

உத்தரபிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்துள்ளனர். இதனால் அத்தகையவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய அந்த மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதே போல் கர்நாடகத்திலும் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.

இந்த விஷயத்தில் மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். சட்டவிரோதமாக வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்தியா ஒன்றும் சத்திரம் கிடையாது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் சரியானதே. சூரிய கிரகணத்தையொட்டி தீவிரமான மூடநம்பிக்கைகளை வெளிப்படுத்துவது சரியல்ல.

எதையும் நம்ப மாட்டேன்

அறிவியல் மற்றும் நமது முன்னோரின் சம்பிரதாயத்தை பின்பற்றுகிறேன். ஆனால் நான் கற்பனைக்கு மீறும் வகையில் எதையும் நம்ப மாட்டேன். நான் காலையில் வீட்டில் பூஜை செய்துவிட்டு எனது அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுகிறேன். எனது அலுவலகத்தில் எந்த பூஜையும் செய்யவில்லை.

இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இதை முதல்-மந்திரி எடியூரப்பாவும் கூறியுள்ளார். மந்திரிசபை விரிவாக்கம் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு மந்திரி பதவி வழங்குவோம் என்று உறுதியளித்தோம். அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவோம்.

பிரச்சினை இல்லை

அதனால் மந்திரிசபை விரிவாக்கத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. எடியூரப்பா டெல்லி சென்று மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார். அதன் பிறகு மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும்.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

எம்.டி.பி.நாகராஜ்

இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த எம்.டி.பி.நாகராஜ், எச்.விஸ்வநாத் ஆகியோருக்கு மந்திரி பதவி இல்லை என்பதை ஆர்.அசோக் மறைமுகமாக கூறியுள்ளார். இதற்கிடையே முதல்-மந்திரி எடியூரப்பாவை நேரில் சந்தித்து பேசிய எம்.டி.பி.நாகராஜ், தனக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் ஒசக்கோட்டைக்கு நான் கொண்டு வந்த திட்டத்தை சரத் பச்சேகவுடா எம்.எல்.ஏ. தொடங்கி வைப்பதாக அவர் முதல்-மந்திரியிடம் புகார் கூறினார். இதை தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Next Story