காரைக்காலில் இருந்து நாகைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.25 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்
காரைக்காலில் இருந்து நாகைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.25 லட்சம் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த மதுபாட்டில்கள் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய கொண்டு வரப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டிகள் கடத்தல் மற்றும் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து லாரியில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் திட்டச்சேரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
லாரியில் மதுபாட்டில்கள் கடத்தல்
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை போலீசார் நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் லாரியை போலீசார் சோதனை செய்தனர்.
அதில் காரைக்காலிலில் இருந்து நாகைக்கு 31 ஆயிரத்து 200 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
ரூ.25 லட்சம்
இதையடுத்து போலீசார், மதுபாட்டில்களுடன் லாரியை பறிமுதல் செய்து நாகை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் லாரியை பார்வையிட்டார். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
வாக்காளர்களுக்கு வினியோகமா?
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர். தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் வாக்காளர்களுக்கு வழங்குவற்காக லாரியில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டதா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story