தஞ்சை மாவட்டத்தில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல்: 7 ஒன்றியங்களில் 1,378 வாக்குச்சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு
தஞ்சை மாவட்டத்தில் முதல் கட்ட தேர்தலில் 7 ஒன்றியங்களில் 1,378 வாக்குச்சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்கு போலீசார் உள்பட 2,660 பேர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் 28 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கும், 276 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கும், 589 ஊராட்சி தலைவர் பதவிக்கும், 4 ஆயிரத்து 569 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் என மொத்தம் 5 ஆயிரத்து 462 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கி 16-ந் தேதியுடன் முடிவடைந்தது.
இதில் மொத்தம் 17 ஆயிரத்து 606 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் வேட்புமனுக்கள் வாபஸ் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்டது, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் தவிர தற்போது மொத்தம் 13 ஆயிரத்து 470 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
7 ஒன்றியங்கள்
முதல் கட்டமாக இன்று திருவையாறு, பூதலூர், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம் மற்றும் அம்மாப்பேட்டை ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடக்கிறது. 2-வது கட்டமாக 30-ந் தேதி தஞ்சை, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களிலும் நடக்கிறது.
முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 7 ஒன்றியங்களிலும் 1,378 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் திருவையாறு ஒன்றியத்தில் 168, பூதலூர் ஒன்றியத்தில் 167, பாபநாசம் ஒன்றியத்தில் 180, கும்பகோணம் ஒன்றியத்தில் 277, திருவிடைமருதூர் ஒன்றியத்தில் 222, திருப்பனந்தாள் ஒன்றியத்தில் 176, அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் 188 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
6½ லட்சம் வாக்காளர்கள்
7 ஒன்றியங்களிலும் ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 27 ஆயிரத்து 121 பேரும், பெண் வாக்காளர்கள் 3 லட்சத்து 34 ஆயிரத்து 184 பேரும், இதர பாலினத்தவர் 24 பேரும் என மொத்தம் 6 லட்சத்து 61 ஆயிரத்து 329 பேரும் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் பணியில் 11 ஆயிரத்து 362 அலுவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டி மற்றும் ஆவணங்களை எடுத்துச்செல்லும் பணியில் 175 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்த வாகனங்கள் நேற்று காலை தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போலீசாரும் சென்றனர்.
2,660 பேர் குவிப்பு
தேர்தல் பாதுகாப்பு பணியில் தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன் மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் அறிவுரையின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஊர்க்காவல்படையினர், ஆயுதப்படை போலீசார், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசார் என 2,660 பேர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Tags :
Next Story