பட்டா வழங்கக்கோரி, வனநிர்ணய அலுவலகத்தை மலைவாழ் மக்கள் முற்றுகை
பட்டா வழங்கக்கோரி வனநிர்ணய அலுவலகத்தை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்வராயன்மலையில் உள்ள கருநெல்லி, தொரங்கூர், மேல்முருவம், ஆயத்தகாடு, கெடர், பட்டி வளைவு உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் நேற்று கள்ளக்குறிச்சி வனநிர்ணய அலுவலகம் முன்பு திரண்டனர்.
பின்னர் அவர்கள் வனநிர்ணய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், நாங்கள் அனுபவித்து வரும் நிலங்களை வனத்துறையினர் கைப்பற்றக்கூடாது,
மேலும் நாங்கள் அனுபவித்து வரும் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் அலுவலகத்தில் இருந்த வன நிர்ணய அலுவலர் ராஜலட்சுமியை சந்தித்து தங்களது கோரிக்கை குறித்த மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களை பெற்ற அவர், இது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதனை ஏற்று மழைவாழ் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story