உள்ளாட்சி தேர்தல் விடுமுறை எதிரொலி: கரூர் மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.5½ கோடிக்கு மது விற்பனை


உள்ளாட்சி தேர்தல் விடுமுறை எதிரொலி: கரூர் மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.5½ கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 26 Dec 2019 10:30 PM GMT (Updated: 26 Dec 2019 7:57 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் விடுமுறை எதிரொலியாக கரூர் மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.5½ கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

கரூர்,

தமிழகத்தில் இன்றும் (வெள்ளிக்கிழமை), வருகிற 30-ந்தேதியும் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அந்த 2 நாட்களும் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையொட்டி கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் மாலை 5 மணிக்கு மூடப்பட்டன. தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வருவதை கணித்ததால் மதுப்பிரியர்கள் கடந்த 24-ந்தேதியும், 25-ந்தேதியும் டாஸ்மாக் கடைகளில் அதிகளவு மதுபாட்டில்களை வாங்கியதால் விற்பனை அமோகமாக நடந்தது. அந்த வகையில் 24-ந்தேதி ரூ.3 கோடியே 5 லட்சத்திற்கும், 25-ந்தேதி ரூ.2 கோடியே 44 லட்சத்திற்கும் மது விற்பனை நடந்தது. இன்று தேர்தல் முடிந்ததும் மாலை 5 மணிக்கு மேல் டாஸ்மாக் கடைகளை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரே‌‌ஷன் கடைக்கு கூட...

பின்னர் நாளை (சனிக் கிழமை) மாலை 5 மணிக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழுவிடுமுறை நாளாகும். பின்னர் 30-ந்தேதி தேர்தல் முடிவடைந்தததும் மாலை 5 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும். டாஸ்மாக் தின விவரங்கள் வாட்ஸ்-அப், பேஸ்புக் என சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதில் ரே‌‌ஷன் கடை திறப்புக்கு கூட இவ்வளவு என விவரமாக காலஅட்டவணை கொடுத்ததில்லையே... என நக்கலாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story