மோசடி செய்த பணத்தை திருப்பி தரக்கோரி பில்லூர் கூட்டுறவு சங்கத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகை
மோசடி செய்த பணத்தை பணத்தை திருப்பி தரக்கோரி பில்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பரமத்திவேலூர்,
பரமத்தி அருகே உள்ள பில்லூர் கிராமத்தில் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் சிட்டா, அடங்கல் மற்றும் நகைகளின் பேரில் பயிர், நகைக்கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கத்தில் முறைகேடுகள் நடப்பதாக கூறி வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர்.
இதையடுத்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலகணேசன், மத்திய கூட்டுறவு வங்கி கள அலுவலர் எழிலரசுக்கு சங்கத்தை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் அலுவலர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வரவு-செலவு கணக்கு, சேமிப்பு கணக்குகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதை கண்டுபிடித்தனர்.
பின்னர் பில்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வங்கி கணக்கு வைத்துள்ளவர்களின் கையெழுத்தை போலியாக பதிவிட்டு வங்கி செயலாளர் மற்றும் சில ஊழியர்கள் சேர்ந்து பணம் கையாடல் செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 3 ஆண்டுகளாக இந்த மோசடி நடந்து வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
பேச்சுவார்த்தை
இதையடுத்து சங்க செயலாளர் வெங்கடேச பெருமாள் விரைவில் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு திருப்பி தருவதாக உறுதி அளித்து கடிதம் அளித்தார். இதையொட்டி அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்ட தேதி முடிவடைந்தும் பணம் திருப்பி தரப்படவில்லை என கூறி நேற்று வாடிக்கையாளர்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டனர். ஆனால் அங்கு காசாளரை தவிர வேறு யாரும் இல்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு சென்ற பரமத்தி போலீசார் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த வாடிக்கையாளர்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story