சபரிமலை செல்வதற்காக இலங்கையை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சென்னை வந்தனர்


சபரிமலை செல்வதற்காக இலங்கையை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சென்னை வந்தனர்
x
தினத்தந்தி 28 Dec 2019 3:45 AM IST (Updated: 28 Dec 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை அய்யப்ப பஜனை மன்றத்தின் குருசாமி விஜயகுமார் தலைமையில் 4 பெண்கள் உள்பட 33 அய்யப்ப பக்தர்கள், இலங்கையில் இருந்து சபரிமலைக்கு செல்ல விமானம் மூலம் சென்னை வந்தனர்.

ஆலந்தூர்,

இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து இலங்கை அய்யப்ப பஜனை மன்றத்தின் குருசாமி விஜயகுமார் தலைமையில் 4 பெண்கள் உள்பட 33 அய்யப்ப பக்தர்கள், இலங்கையில் இருந்து சபரிமலைக்கு செல்ல விமானம் மூலம் சென்னை வந்தனர். சென்னையில் இருந்து பஸ் மூலம் அவர்கள் சபரிமலைக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

இதுபற்றி இலங்கையை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் கூறியதாவது:-

இலங்கையில் இருந்து சபரிமலைக்கு செல்ல 41 நாள் விரதம் இருந்து பூஜை செய்தோம். இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்து விட்டோம். இங்கிருந்து பஸ்களில் கேரளா செல்கிறோம். சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்துவிட்டு 4-ந் தேதி காசி யாத்திரை தொடங்க உள்ளோம்.

இலங்கையில் வாழும் 4 மதத்தினரும் எல்லா நன்மைகளும், அமைதியும் பெறவேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம். காசி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு 10-ந்தேதி சென்னை வந்து, பின்னர் இலங்கைக்கு புறப்பட்டு செல்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story